Friday 7 March 2014

வானமே எல்லை!












வானமே எல்லை!
கசக்கிக் கட்டவும் வழியின்றி-
கந்தலாகிப் போன உடுக்கை…
மூன்று வேளை வழியில்லா
தட்டில் சோற்றுப் பருக்கை!
தன் வயிற்றுத் தீயார திரட்டிய
காகிதக் குப்பையில் படுக்கை!
காணும் கனவிலோ அரசன் -
தங்கத்திலே உண்டு இருக்கை!

ரவிஜி…!
(புகைப்படம் : ரவிஜி)

4 comments:

  1. மனம் வருந்த வைக்கிறது ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உண்மை ஐயா! செல்லில் புகைப்படம் எடுத்தபோது எனக்கும் அந்த உணர்வே மேலிட்டது...ஆனாலும் உறக்கத்தில் அவரது முகம் பிரதிபலிக்கும் உணர்வு...!? கருத்திற்கு நன்றி ஐயா!

      Delete
  2. வருத்தம் தந்த படம்..... இது போல எத்தனை எத்தனை மனிதர்கள் நமது நாட்டில்.....

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா. இந்த மனிதரை நான் அவ்வப்பொழுது காண நேர்கிறது. தங்களின் உணர்வுப் பகிர்வுக்கு நன்றி ஐயா!

      Delete