Wednesday, 3 October 2012

நீல(ள)... வானம்...!


நீல(ள)... வானம்!

பள்ளிப் பருவத்தின்
இளம் மட்டைத்துள்ளல்கள்;
என் வீட்டு ஜன்னலின்
கண்ணாடி விள்ளல்கள்.
கடலன்ன நீல வானம்
காணத் தந்த வள்ளல்கள்?

                                                                                             ரவிஜி...
(புகைப் படம் : ரவிஜி...)

Monday, 1 October 2012

நிலை...?


புகைப்படம் : ரவிஜி...

தள்ளாமை...!

தள்ளாமை

'தள்ளாத' வயதிலும்
தள்ளிடும் சைக்கிள்!
குலை தள்ளிட்ட
தென்னைக்கான தேடல்!

                                                                                         ரவிஜி...
                                                                                        (புகைப்படம் ரவிஜி...)

அப்பா...!


அப்பா...!

என் இதயம்
உலகின் கரையில்
அதன்
அலைகளை வீசி
உனது
பெயரின் கீழே
இவ்வாறெழுதி-
கண்ணீர் மல்கிட
கையொப்பமிடுகிறது,
"நீ. . .
என் உயிர்!"

                                                                                          தாகூர் (தமிழில் - ரவிஜி...)
புகைப்படம்: நன்றி கூகிள்

உயர்வு

உயர்வு

விண்ணை முட்டி
உயர்ந்து நின்ற மலை
கொக்கரிதது,
சமவெளியைப் பார்த்து;
"நான் உயர்ந்தவன்!"

சமவெளி சொல்லியது
"உண்மை-
ஆனால் உன்
உயர்வு வெளிப்படுவது
என்
சம நிலையொடு
ஒப்பிடப் படும் போதுதான்!"
மலை-
மெளனமாயிற்று.

                                                                                                   ரவிஜி...
                                                                                                 (நன்றி - தாமரை-நவம்பர்-91)
(புகைப்படம் - ரவிஜி)